Sunday 13 May 2018

HSC results publishing May 16

மே 16-இல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்



தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் புதன்கிழமை (மே 16) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.


  9 லட்சம் மாணவர்கள்: 


தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 6 ஆயிரத்து 903 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவியர், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7, 620 பேர் எழுதினர்.  


பெற்றோர், மாணவர்களுக்கு... 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைப் போலவே மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப் படுத்தப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. 


ஆன்லைன் முறை ஏன்?

 அரசுத் தேர்வுத் துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவுகளை முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது. 


ஊடகவியலாளர்களுக்கு... 


தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கை ஊடகவியலாளர்களுக்கு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய முறையை இந்தாண்டு முதல் தேர்வுத் துறை அறிமுகப்படுத்தவுள்ளது.


No comments:

Post a Comment