Friday 22 June 2018

தினமும் இரண்டு வேளை பல் துலக்கினால் மாரடைப்பு வராது

தினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு வராது.


காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.


இதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ்’ எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது:


உடலில் தேவையற்ற கொழுப்பு, லிப்பிட் பொருட்கள் அதிகமானால் ரத்தக்குழாயில் அவை படிகின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது. கொழுப்பு, லிப்பிட் மட்டுமல்ல.. வைரஸ் கிருமிகள் மற்றும் நோய்த் தொற்றுகளால்கூட மாரடைப்பு ஏற்படும். பெரும்பாலும் கிருமித் தொற்று பல்லில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. 


வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும் உணவுப் பொருட்கள் செரிக்கப்பட்டு சக்தியாகவும் சத்துகளாகவும் மாறுகின்றன. பல்லில் படியும் உணவுத் துகள்கள் கிருமிகளாக மாறுகின்றன. ஒழுங்காக பல் தேய்க்காவிட்டால் இவை உள்ளே சென்று படிப்படியாக மாரடைப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். 

தினமும் 2 வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு, ஸ்டிரோக் வரும் வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை குறையும். இதயம் பலமாக இருக்கும்

Sunday 3 June 2018

உடல் மொழிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

உடல் மொழி


1.மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது.


2.மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.


3.மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.


4.நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.


5.நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.


6.பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.


7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.


8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.


9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.


10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்

Friday 1 June 2018

மூளை பாதிப்படையக் காரணங்கள்

நம் மூளை சில நேரங்களில் ஏன் பாதிக்கிறது


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.


2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.


3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.


4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.


5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.


6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.


7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.


8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.


9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.


10. பேசாமல் இருப்பது : அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது