Thursday 5 July 2018

புதிய பாடத்திட்ட பொருண்மை அறிவோம்

புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி....

முன் எப்போதும் இல்லாத அளவில் .... மாறுபட்ட சிந்தனை...                  

செய்யுள், உரைநடை, துணைப்பாடம், இலக்கணம் என்ற அடிப்படை அலகிலிருந்து 'பொருண்மை' எனும் புதிய கண்ணோட்டத்திற்கு பள்ளிக்கல்வித் துறை தனது நகர்வைச் செய்துள்ளது.
1. மொழி
2. இயற்கை/வேளாண்மை/சுற்றுச்சூழல்
3. பண்பாடு
4. அறிவியல்/தொழில்நுட்பம்
5. கல்வி
6. நாகரிகம்/தொழில்/வணிகம்
7. கலை/அழகியல்/புதுமைகள்
8. நாடு/சமூகம்/அரசு/நிருவாகம்
9. அறம்/தத்துவம்/சிந்தனை
10. மனிதம்/ஆளுமை
                        - எனும் கருத்தியலின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை  தனது மாணவச்  சமூகத்தை அடுத்த புலமைத் தளத்திற்கு நகர்த்தியுள்ளது. இதற்கு பாடத்திட்டக்குழுவின்  பெருமுயற்சியும் காரணம். பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாய்ச்சல் இன்னும் வெகுதூரம் நம்மை அழைத்துச்செல்லும். மாணவ/மாணவியரின் மன வளர்ச்சிக்கு ஏற்பப் பாடுபொருளைத் தேர்வு செய்துள்ளது (உதா. கிழவனும் கடலும்- படக்கதை -காமிக்ஸ்- இதில் முக்கியமானது)

ஆறாம் வகுப்பிலிருந்து  பன்னிரண்டாம் வகுப்புவரை இது தொடர்வதால், தமிழ் சிந்தனை மரபின் தொடர்ச்சி ஆய்வாளர்கள் நிலையில் மட்டுமல்லாமல் பள்ளி மாணவ நிலையிலும் கிடைப்பதன் மூலம் எதிர்காலத் தமிழ்ச் சமூகம் மிகச்சிறந்த அறிவுச்சமூகமாக மாறும் என்பது உறுதி.

குறிப்பு:
புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி....

அட்டவணையைக் காண்க

No comments:

Post a Comment